திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன் அன்னையார் மறைவு

1 Min Read

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, சரபோஜிநகர், தமிழ் பல்கலைக்கழக மேனாள் கண்காணிப்பாளர் மறைந்த க.இராமச்சந்திரன் அவர்களின் வாழ்விணையரும், தமிழ் பல்கலைக்கழக பணியாளர் இரா.வீரராகவன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் ஆகியோரின் தாயாருமான  இரா.பாண்டி செல்வி (வயது 60) 07.04. 2026 அன்று மாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று (8.4.2026) காலை 11:30 மணி அளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சரபோஜி நகரில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்புக்கு: 8754365832, 9790258255

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் அலைப்பேசி வழியாக தோழர் செந்தூர்பாண்டியனுக்கு ஆறுதல் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *