எகிப்திலுள்ள ஒரு நிறுவனம் 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை சிமெண்டை விடத் திடமான டைல்ஸ்களாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. அதன் இலக்கு 2 தான். ஒன்று, மத்திய தரைக் கடலில்(Mediterranean Sea) டன் கணக்கில் கழிவுகள் சேர்வதைத் தடுப்பது. மற்றொன்று கட்டடத் துறையிலிருந்து அதிகள விலான கழிவுகள் வெளியேற்றப் படுவதைத் தடுப்பது என நிறுவனம் தெரிவித்தது. டெலிகிரீன் எனும் அந்த நிறுவனம் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை மறுபயனீடு செய்துள்ளது. இது தொடக்கம்தான் என அதன் இணை நிறுவனர் கலீட் ராஃபத் கூறியுள்ளார். 2025ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை மறுபயனீடு செய்வது திட்டம் என் றார் அவர். பிளாஸ்டிக் பைகளை மறுபயனீடு செய்யும் நிறுவனத்தின் தொழிற்சாலை கைரோவின் புறந கரில் இருக்கின்றது.
பிளாஸ்டிக் பைகளிலிருந்து தயாரிக்கப்படும் டைல்ஸ்களை சொத்து, கட்டுமான நிறுவனங்க ளுக்கு விற்கப்படுகின்றன. அந்தக் கற்கள் வெளிப்புற நடைபாதைகள் அமைக்கப் பயன்படுகின்றன. ஆண்டுக்கு 74,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மத்திய தரைக் கடலில் சேர்வதாக 2020இல் வெளியிடப் பட்ட அறிக்கை கூறுகிறது.