இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் 4 ஜி சேவையைத் தொடங்க உள்ளதாகவும் விரைவில் விண் வெளி மற்றும் நிலவில் குடியேற இருக்கும் மக்களுக்கான முதல் வச்திகளை துவங்கும் முகமாக இந்த சேவை அமையும் என்று நாசா கூறியுள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தாலும் தொலைத் தொடர்பு சமிக்ஞை கிடைக்குமா? இணையத் தைப் பயன்படுத்த முடியுமா? போன்ற கேள்விகள் இருக்கும் வேளையில்…நிலவுக்கே தொலைத் தொடர்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்ப்பது சாத்தியமாகி யுள்ளது. 4நி தொழில்நுட்பக் கட்ட மைப்பை நிலவில் அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் நோக்கியா நிறுவன மும் திட்டமிட்டுள்ளன.
அது இவ்வாண்டின் இறுதியில் செயல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது. ஏலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 4 ஜி க்கான கட்டமைப்பு அங்கு நிறுவப்படும் என்று கூறப்பட்டது.
தரமான காணொலிகள், இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்பம், உணரும் ஆற்றல் போன்றவற்றுக்கு 4நி கட்டமைப்பு உதவும் என்று நோக்கிய சொன்னது. 2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு மனிதர்கள் நிலவில் வசிப்பதற்கு, விண்வெ ளியில் சுற்றுலா விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு இந்த 4 ஜி சேவை பயன்தரும் என்று கூறப்பட்டது.