திராவிடர் இயக்கத்தின் தீரர்களில் – தளபதிகளில் ஒருவர் தான் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள். இவர் 24.9.1924இல் விருதுநகரில் பிறந்தார். இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க கருத்துகளால் கவரப்பட்டார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டர். அண்ணாவின் அருமைத் தம்பி. தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்.
பேச்சாளர், எழுத்தாளர், நகர்மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல பதவிகளை அலங்கரித்தவர்.
அந்தமான் தீவில் தி.மு.கழகத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்றவர் தலையிலுள்ள குருதிக் குழாய் வெடித்து 7.4.1979 இரவு 8 மணியளவில் மறைந்து போனார்.
தந்தை பெரியாரின் கொள்கையில் அதிதீவிரம் காட்டியவர் என்பதால் வாலிபப் பெரியார் என்றே அழைக்கப்படலானார்.
வாழ்க! ஏ.வி.பி. ஆசைத்தம்பி!!
