கலைஞர் குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

சென்னை, ஏப்.7- கலைஞர் குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம்.

கலைஞர் குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

கலைஞர் கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கலைஞர் தனது தந்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான தொண்டர்களின் தலைவர். எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை.

முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் நாகரிகம் கருதியே மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிகிச்சை முறை, உடல்நிலை குறித்து நாங்கள் பேசுவதில்லை.

கலைஞரின் கடைசி கால சிகிச்சை விவரங்கள் பொதுமக்கள் முன்பு வைக்கப்பட்டன.

கலைஞர் குறித்து அவதூறாக பேசினால் திமுக தொண்டனாக பார்த்து கொண்டிருக்க முடியாது.

தோல்வி பயத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *