சென்னை, ஏப். 6- இந்தியாவில் நடை பெறவுள்ள சட்டப் பேரவை மற்றும் இடைத் தேர்தல்களை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் ‘ECINet’ எனும் புதிய ஒருங்கிணைந்த தளத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தளம்
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் பணிகளுக்காக இந்தத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ‘உங்கள் வேட்பாளரை தெரிந்துகொள்ளுங்கள்’ (Know Your Candidate – KYC) என்ற தனிச் சிறப்புப் பிரிவு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் பின்வரும் தகவல்களை எளிதாகப் பெறலாம்:
அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் (ஏதேனும் இருப்பின்). சொத்து மற்றும் கடன் விவரங்கள் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் வேட்பாளர்கள் தாக்கல் செய்த முழுமையான உறுதிமொழிப் பத்திரம் (படிவம் 26) ஆகியன பற்றி அறியலாம்.
உலகின் மிகப்பெரிய
தேர்தல் சேவைத் தளம்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைத்து இந்த ECINet உருவாக்கப் பட்டுள்ளது. இது உலகின் மிகப் பெரிய தேர்தல் சேவைத் தளமாகக் கருதப்படுகிறது.
இத்தளத்தின் மூலம் வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியலில் பெயர் தேடுதல், விண்ணப் பங்களைக் கண்காணித்தல், ‘எப்பிக்’ (EPIC) அட்டை பதிவிறக்கம் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுதல் போன்ற சேவைகளை ஒரே பாதுகாப்பான இடத்தில் பெற முடியும்.
புகார் அளிக்க உடனடி வசதி
தேர்தல் விதி மீறல் களைப் புகா ரளிக்க ‘சி-விஜில்’ மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிச் சேவை களை வழங்க உரிய கருவிகளும் இந்தத் தளத்தில் இணைக்கப்பட் டுள்ளன.
நிகழ்நேரத் தகவல்கள் மற்றும் புகார்களுக்குத் தீர்வு காணும் ஒற்றைச் சாளர தளமாக இது செயல்படும் இவ்வாறு தேர்தல் ஆணையம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்தல் நிலவரம்:
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு 1,955 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இந்தச் சூழலில், வாக்காளர்கள் விழிப் புணர்வுடன் வாக்களிக்க இந்தத் தளம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
