திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுத்தமல்லி சுப்பிரமணியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, தனக்கு வாக்கு சேகரிக்க வந்தமைக்காக தனது நன்றியை தெரிவித்தார். உடன் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கோபி, நமச்சிவாயம், வழக்குரைஞர் ஆலிப் மீரான், இனிய அந்தோணி ராஜ், பேராசிரியர் பாபு, கழக பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் குணசீலன், சண்முகநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் உள்ளனர் (திருநெல்வேலி- 06-03-2026)

2026 திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று ஆலங்குளத்தில் தொடங்கும் தேர்தல் பரப்புரைப் பயணத்திற்கு திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நெல்லை மாவட்ட தலைவர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் வேல்முருகன், மாவட்ட காப்பாளர் காசி ஆகியோர் முன்னிலையில் கழகத் தோழர்கள் வரவேற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் ஆகியோர் உள்ளனர். (நெல்லை, 06-04-2026)
