பக்தியா – ‘பக்’ தீயா?

1 Min Read

திருவண்ணாமலை, ஏப், 6 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 55) என்பவர் நேற்று (15.4.2026)  அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். முன்னதாக அவர் கோயில் ராஜகோபுரம் முன்பு தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.

வழக்கமாக கிரிவலம் செல்ல தொடங்கும் பக்தர்கள் ராஜகோபுரம் எதிரில் உள்ள தேரடி வீதியில் பதினாறு கால் மண்டபத்தின் எதிரில் கற்பூரம் ஏற்றிவிட்டு வழிபட்ட பின்னரே கிரிவலத்தை தொடங்குவார்கள். இந்த நிலையில் ஜெயலட்சுமி தேரடி வீதியில் நின்று ராஜகோபுரத்தை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் கற்பூரம் தீப்பற்றி எரிந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து திருவண்ணாமலை டவுண் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *