காரைக்குடி, ஏப். 6- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் 90, தளபதி 70 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையில், சிவகங்கை மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன் , மாவட்ட துணைத் தலைவர், கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், பொதுக்குழு உறுப் பினர் சாமி.திராவிடமணி, நகர தலை வர் ந.ஜெகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று உரை யாற்றிய மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை ‘திராவிட மாடல் தான் இந்த நாட்டை சூழ்ந்திருக்கும் அபா யத்தைக் காக்கும் பேராயுதம் ‘ என்று கருத்தரங்கத்தின் நோக்கத்தையும், இன்றைய அவசியத் தேவையையும் வெளிப்படுத்தினார்.
‘திராவிடத்தின் திசைகாட்டி’
‘திராவிடத்தின் திசைகாட்டி’ என்ற தலைப்பில் உரையாற்றிய திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தனது உரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தனது 90 அகவையிலும் சமூக நீதி காக்க, திராவிட மாடல் விளக்க பெரும் பயணம் எனும் தொடரோட்டம் பற்றியும், இந்திய அரசமைப்புச் சட் டத்தை முதன் முதாலாக திருத்த வைத்த தந்தை பெரியாரின் போர்க் குணம் பற்றியும், 69% இட ஒதுக்கீட்டை 31சி பிரிவின் மூலம் அரசமைப்புச் சட் டத்தில் பாதுகாத்த ஆசிரியரின் சட்ட நுண் அறிவையும் எடுத்துரைத்தார். திராவிட மாடல் அரசுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திசை காட்டியாகவும், பாதுகாப்பு கேடயமா கவும் இருப்பதையும் எடுத்துரைத்தார்.
‘திராவிடத்தின் செயல் வீச்சு’
‘திராவிடத்தின் செயல் வீச்சு’ என்ற தலைப்பில் உரையாற்றிய தி.மு.க. மாணவர் அணி தலைவர் வழக்குரைஞர் இரா.இராஜீவ் காந்தி தனது உரையில், ‘திராவிடம் என்கிற தத்துவம் ஜாதி வாலை வெட்ட வைத்து, படிப்பு எனும் பட்டத்தை ஓட்ட வைத்து சக மனி தனை மனிதனாக்கியது. இன்றைக்கு நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் மூலம்தான் கோவில் இருக்கும் தெருவில் நடக்கும் உரி மையை இந்தியா முழுமைக்கும் பெற் றுத் தந்தவர் தந்தை பெரியார். திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய அனைத்து ஜாதியி னர் அர்ச்சகர் நியமனம் என திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் விளக்கினார், தனது உரையை பயிற்சி வகுப்பு போல நடத்திய பாங்கு சிறப்பாக அமைந்தது. காரைக்குடி நகர் மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, தி.மு.க. நகரச் செயலாளர், நகர் மன்றத் துணைத் தலைவர் நா.குணசேகரன் வாழ்த்துரை வழங் கினர்.
கலந்துகொண்டோர்
நிகழ்வில் மேனாள் அமைச்சர், திமுக இலக்கிய அணித் தலைவர் மு.தென்னவன், காரைக்குடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கல் லால் கரு.அசோகன், அண்ணா தமிழ் கழக தலைவர் அ. கதிரேசன், பக மாநில துணைத்தலைவர் கோபு பழனிவேல், மாவட்ட பக தலைவர் சு.முழுமதி, திதொக மாவட்ட தலைவர் சி.சூரியமூர்த்தி, செயலாளர் சொ.சேகர், தேவகோட்டை நகர தலை வர் வீ.முருகப்பன், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி பாலு, பலவான் குடி தலைவர் ஆ.சுப்பையா, தேவ கோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசெப், தேவகோட்டை பாரதி தாசன், திருமனவயல் பன்னீர்செல்வம், திமுக மாணவர் அணி மாவட்ட தலைவர் கதி.ராஜ்குமார், திமுக நகர மாணவர் கழக அமைப்பாளர் அசரப், தஞ்சாவூர் மாவட்ட பக தலைவர் அழகிரி, திமுக நகர துணைச்செயலாளர் ராஜலட்சுமி. திமுக மகளிர் தொண் டரணி அமைப்பாளர் ஹேமலதா, எஅய்டியூசி மாநிலக்குழு உறுப்பினர் பழ.ராமச்சந்திரன், ஆபரண அகம் சுப.பரமசிவம், பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி, நேசனல் கேட்டரிங் செய்யது, பெரியார் முத்து, சா. இராமன் மற்றும் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் அன்னை எஸ்.மைக்கேல் ராஜ், திவ்யா காரைசக்தி, பூமிநாதன், மலர்விழி பழனியப்பன், தெரசா, கலா, சித்திக், தனம் சிங்கமுத்து, சேட்டு, நாச்சம்மை சிவாஜி, கார்த்திகேயன், சன். சுப்பையா, அன்பழகன், முத்து பழனியப்பன், மாவட்ட திமுக பிரநிதிகள் கென்னடி, சேவியர், சே.சொக்கலிங்கம், தோழமை கட்சியினர், பேராசிரியர்கள், பங் கேற்றுச் சிறப்பித்தனர், காரைக்குடி மாவட்ட அமைப்பாளர் சி செல்வமணி நன்றியுரை கூறினார்.
நிகழ்வை பேரசிரியர் முனைவர் மு.சு.கண்மணி தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நேரலையை அறிவு வழி காணொலி இயக்குநர் தோழர் அரும் பாக்கம் தாமோதரன் சிறப்பாக வழங் கினார், ஆட்டோ விளம்பரத்தை நகர பொறுப்பாளர்கள் சிறப்பாக செய் தனர். மண்டப வாயில் பக்கம் சாலை யின் நான்கு புறமும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன, காலை முதல் ஆசிரியரின் 90ஆவது பிறந்த நாள் உரை ஒலிபரப்பப்பட்டது. திராவிட மாடல்தான் ஒன்றியத்தை காக்கும் ஒப்பற்ற தத்துவம் என கட்டியம் கூறியது கருத்தரங்கம்.