‘விஜய்’ வேட்பு மனு தாக்கல் குழப்பமோ குழப்பம்!

1 Min Read

சென்னை, ஏப். 6- த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் திருத்தம் மற்றும் கூடுதல் விவரம் சேர்க்க 3 பிரமாணப் பத்திரங்களையும், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் ரூ.6 கோடி பிரச்சார வாகனம் தொடர்பாக கூடுதல் விவரம் சேர்க்க ஒரு பிரமாணப் பத்திரத்தையும் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்தனர்.

விஜய் வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில், வயது மற்றும் வழக்குகள் குறித்து திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.மேலும், அவர் 2 தொகுதிகளிலும் அளித்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து விவரப் பகுதியில் தற்போது அவர் பயன்படுத்தி வரும் ரூ.6 கோடி மதிப்பு பிரச்சார வாகனம் குறித்து குறிப்பிடவில்லை.

இதையடுத்து, த.வெ.க. வழக்குரைஞர்கள் பிரிவினர் பெரம்பூர் தொகுதியில் 2 வழக்குகள் உள்ள விவரம், வயது திருத்தம் தொடர்பாகவும் மீண்டும் பிழைத் திருத்தல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

மேலும் இரு தொகுதிகளிலும் பிரச்சார வாகனத்தை சொத்துவிவரத்தில் கூடுதலாக சேர்க்கக்கோரி கூடுதல் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தனர். இதுகுறித்து தவெகவினர் கூறியதாவது: பொதுவாக விண்ணப்பங்களில் பூர்த்தியடைந்த வயதை தான் குறிப்பிட வேண்டும். ஆனால், பெரம்பூரில் நடப்பு வயதை குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சி கிழக்கில் சரியாக பூர்த்தி யடைந்த வயது குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரச்சார வாகனம் சேர்க்காத விவரமும் திருச்சி கிழக்கில் மனு தாக்கல் செய்த பிறகே தெரியவந்தது.

இவ்வாறு கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *