வாலாஜாபாத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள், மகளிர் நாள் கருத்தரங்கம்

2 Min Read

அரசியல்

வாலாஜாபாத்,  ஏப்.  6-    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கட் டடத்தில், 26.3.2023 அன்று காலை 10.30 மணியளவில், அன்னை மணி யம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு, மகளிரணி தோழர் அ.ரேவதி தலைமை தாங்கினார். மருத்துவர் மு.குழலரசி அனை வரையும் வர வேற்று உரையாற்றி னார். தொடக்க நிகழ்ச்சியாக எழுச்சிப் பாடகர்கள் உலக ஒளி மற்றும் சம்பத் குமார் ஆகியோரின் பாடல்கள் அனைவரின் கவனத் தையும் ஈர்த்தன. 

காஞ்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்தும், தந்தை பெரியா ருக்கு அன்னை மணியம்மையார் செய்த அளப்பரிய தொண்டுகள் குறித்தும் அறிஞர் அண்ணா அவர்களும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் அன்னை மணியம்மையாரைப் பற்றி தெரிவித்த செய்திகள் குறித்தும்,   தந்தை பெரியாருக்கு 1938இல் பெண்கள் மாநாட்டில் ‘தந்தை பெரியார்’ என்ற பட்டம் வழங்கியது குறித் தும்,  பாலின சமத்துவம் குறித்தும் உரையாற்றினார்.  காஞ்சி மாவட் டத் தலைவர் அ.வெ.முரளி மகளிர் உரிமை நாள், அன்னை மணியம் மையார் தொண்டுகள் குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார். 

செங்கை மாவட்டத் தலைவர் பூ.சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட் சியின் மாவட்டச்  செயலாளர் பாசறை செல்வராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சண்முகம், தோழர் அரிதாஸ் ஆகியோர் உரையாற்றிய பிறகு  உள்ளாட் சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தி. சிவசங்கரி சிவக்குமார், ஆசிரியர் 

கே.சரண்யா அசோக் குமார், சமூகப் போராளி பரஞ்சோதி ஆகி யோர் தம் உணர்ச்சிப் பெருக்கான உரைகளை வெளிப்படுத்தினர். 

நிறைவாக, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை சிறப்பு ரையாற்றினார். 

அவர்தம் உரையில், தந்தை பெரியா ருக்கும், இயக்கத்திற்கும் மணியம் மையார் செய்த தொண்டு, இராவண லீலா மாட்சி, நெருக்கடி நிலை காலத்தில் இயக்கத்தை வழி நடத்திய பாங்கு, மகளிர் உரிமை காப்பதில் காலந்தோறும் திரா விடர் இயக்கம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யின் கபட நாடகங்கள், தமிழர் தலைவர் செயல்பாடு, திரா விட மாடல் ஆட்சியின் மகளிர் உரிமை திட்டங்கள் முதலிய செய்திகள் குறித்து விளக் கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் எஸ்.செல்வம், உள்ளாட் சிப் பிரதிநிதி தீபா காமராஜ்,  ராஜ லட்சுமி மோகன், எஸ்.ஜெயந்தி,  அசோக் குமார், செல்வராஜ், பழனி, பழ. ராஜேந் திரன், பழவேரி மாலிக் பாட்சா, நித்தியா னந்தம், பத்ரி  உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். மாணவர் கழகத் தோழர் திரா விடச் செழியன் நன்றி கூற கருத் தரங்கம் பகல் 2.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.    வாலாஜா பாத் நிகழ்வு அப்பகுதியில் புதிய எழுச்சியை உண்டாக்கியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *