வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பி.சீனிவாசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர்கள் சு.வனவேந்தன், கோ.திராவிடமணி, பொதுகுழு உறுப்பினர் அசெ.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், ஒன்றிய அமைப்பாளர் பொறியாளர் பூபதி, ஈரோடு பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து ஆதரவு நல்கினர்.
