கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 5.4.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பதவியை பறிக்கும் பாஜக: மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியை இழக்கும் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு. கட்சி. தற்போதைய துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் ஏப்ரல் 9இல் முடிவுறும் நிலையில், அந்த பதவியை  சந்திரபாபுவின் தெலுங்கு தேசத்திற்கு தர பாஜக முடிவு என தகவல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை – சி.பி.எஸ்.இ. அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். 2026 – 2027-ஆம் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திருநங்கையர் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலின் பிரதிநிதிகள் மனு தாக்கல். ஒரு நபரின் வாழ்வியல் அனுபவம் சார்ந்த மற்றும் சுய உணர்வு சார்ந்த அடையாளத்திற்குப் பதிலாக, உயிரியல் அல்லது சமூக-மருத்துவ வகைப்பாடுகளை கொண்டு, சட்டத்தின் வாயிலாக ஒரு நபர் யார் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த சில அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளை இந்த மனு எழுப்பியுள்ளது.

தி இந்து:

* தங்களுக்கு கீழ் பட்டவை அல்ல மாநில அரசுகள், உச்ச நீதிமன்ற நீதிபதி: ஒன்றிய அரசு, மாநிலங்களை சம பங்காளிகளாக கருத வேண்டும்: ‘கீழ் பட்டவையாக’ ஒன்றிய அரசு கருதக்கூடாது உரிய மரியாதை, அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து

* தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்து வோம் என கூறி வாக்கு கேட்க முடியுமா? மோடி, அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் சவால்: ஹிந்தியை திணிக்க முயற்சி என குற்றச்சாட்டு

தி டெலிகிராப்:

* மகளிர் இட ஒதுக்கீடு குறித்த கடித மோதல்: பாஜகவின் திருத்தத் திட்டத்திற்கு காங்கிரஸ் கேள்வி. சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் திருத்தங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒன்றிய அரசு திடீரென அறிவித்ததை காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பாஜகவின் பொருட்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரி ‘கேமராவில் சிக்கினார்: கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான பனிஹாட்டி தொகுதியின் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் பாஜகவின் பிரச்சார பொருள்களைத் தயாரிப்பது போன்ற காணொலி ஒன்று பரவியதை அடுத்து, சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு முன்பு அவரைப் பதவியில் இருந்து நீக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *