தமிழ்நாடு தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு தி.மு.க. கூட்டணிக்கே மீண்டும் பெரும்பான்மை! எடப்பாடி மற்றும் விஜய்யின் நிலை என்ன?

2 Min Read

சென்னை, ஏப். 5 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக் போல் ஏஜென்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான இந்த கூட்டணி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 181 முதல் 189 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணி சுமார் 40.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களிடையே திமுகவிற்குப் பெரும் ஆதரவைத் தேடித் தந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மற்றும் விஜய்யின் த.வெ.க.

எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 29 சதவீத வாக்கு வங்கியைப் பெற்று 38 முதல் 42 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக லோக் போல் கணித்துள்ளது. உட்கட்சிப் பூசல்கள், முக்கியத் தலைவர்களின் வெளியேற்றம் மற்றும் தொண்டர்களின் மனச்சோர்வு போன்றவை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக-வின் பலத்தைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், முதன்முதலாகத் தேர்தல் களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 23.9 சதவீத வாக்குகளைப் பெற்று 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகமாக இருந்தாலும், தனித்துப் போட்டியிடுவது அவர்களது வெற்றி வாய்ப்புகளைச் சில தொகுதிகளுடன் சுருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

போல் டிராக்கர் கணிப்பு

போல் டிராக்கர் நிறுவனம் வெளியிட் டுள்ள மற்றொரு கருத்துக்கணிப்பும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை முன்னறிவிக்கிறது. இதன்படி ஆளும் கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி, 42.7 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 46 முதல் 52 இடங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும், விஜய்யின் தவெக 19.2 சதவீத வாக்குகளுடன் 6 முதல் 12 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 5.1 சதவீத வாக்கு களுடன் 0 முதல் 2 இடங்களை மட்டுமே பெறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சிறுபான்மையினரின் வாக்குகள் ஒருங்கிணைந்து திமுக பக்கம் சாய்வதும், முதலியார், நாயுடு மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் திமுகவிற்கு ஆதரவாக இருப் பதும் அக்கூட்டணிக்கு வலிமை சேர்க்கிறது.

முதலமைச்சர் வேட்பாளர்
விருப்பம் மற்றும் வாக்குகள் பிரிப்பு

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச் சராக யார் வரவேண்டும் என்ற மக்கள் விருப்பத்தில் மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அதிமுக மற்றும் தவெக எனப் பிரிவது திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய்யை விட மு.க.ஸ்டாலின் ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் நன்கு அறியப்பட்ட தலைவராக மக்களிடையே பார்க்கப்படுவது திமுகவின் வெற்றி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்துவதாகக் இந்த இரண்டு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *