நிலவை நெருங்கியது நாசா அனுப்பிய ஆர்டமிஸ் விண்கலம்

2 Min Read

வாசிங்டன், ஏப்.5- நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-2 மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
1969-ஆம் ஆண் டுக்குப் பிறகு மனிதர் களை நிலவுக்கு அனுப்பு வதற்கான, ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா துவங் கியது. கடந்த 2-ஆம் தேதி ஆர்டெமிஸ்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக நிலவைச் சுற்றி வருவார்கள். இந்த பயணம் மனிதர்கள் இது வரை சென்றதைவிட பூமி யிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். மேலும் நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங் குகிறது. நிலவின் மறுபக்கம் சென்று ஆய்வு செய்ய விண்வெளி வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஏவப்பட்ட 2 நாள்கள், 5 மணி நேரம் மற்றும் 24 நிமிடங்களில் இந்த முக்கிய மைல்கல்லை விண்கலம் எட்டியது. தற்போது இந்த விண்கலம் பூமியை விட நிலவுக்கு மிக அருகாமையில் நிலை கொண்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. விண்கலத்திலிருந்து பேசிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், ‘இப்போது விண் கலத்தின் ஜன்னல் வழியாக நிலவைப் பார்க்க முடிகிறது; அது ஒரு அற்பு தமான காட்சி’ என்று கூறினார்.
பயணத்தின் அடுத்த கட்டமாக, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, பூமியின் ஈர்ப்பைவிட நிலவின் ஈர்ப்பு விசை விண்கலத் தின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த மைல் கல்லை எட்டினால், மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணம் செய்த மனிதர்கள் என்ற சாதனையை இக்குழு படைக்கும். நிலவைச் சுற்றி வரத் திட்டமிட்டுள்ள ஆர்டெ மிஸ் 2 குழு பயணத்தின் 6-ஆவது நாளில் நில வுக்கு மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். மொத்தம் 10 நாட்கள் இந்த விண்வெளிப் பயணம் திட்டமிட்டப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *