பி.ஜே.பி.க்குக் கடவுளே ஓட்டுப் போடச் சொல்லும் காணொலி அப்ப சரி, இப்பவே முழு தோல்வியை பிஜேபி ஒப்புக்கொண்டுவிட்டது!

1 Min Read

சென்னை, ஏப்.5- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதுரை திருப்பரங்குன்றம் பிரச்சினையை மய்யப்படுத்தி கந்தன் முருகன் வாக்கு என்ற காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பக்தர் ஒருவர் முருகனிடம் வேண்டுவது போலவும், அதற்கு அந்த கடவுள், பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறுவது போலவும் ஏ.அய். மூலம் தயாரிக்கப்பட்ட காணொலி அது.
மத உணர்வை தூண்டி வாக்கு சேகரிக்கும் இந்த நடவடிக்கை, தேர்தல் விதிகளுக்கும். சட்டத்திற்கும் விரோதமானது.
எனவே அந்தக் காணொலியை வெளியிட்டவர்கள் மீதும், பா.ஜனதா கட்சிதலைமை மீதும் தகுந்த நடவ டிக்கை எடுத்து அந்த காணொலியை வலை தளங்களில் இருந்து நீக்க வேண்டும்.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஊழல் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. உத்தரபிரதேச அரசினால் இடைநீக்கம் செய்யப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணிக்கு அனுப்பப்பட்டார்.
தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆளான ஒருவரை மதுரைக்கு மாற்றியிருப்பதை ஏற்க முடியாது. தேர்தலில் நியாயமான, வெளிப்படையான பணிகள் அவரால் பாதிக்கப்படும். எனவே அவரது பணிமாற்ற உத்தரவை உடனே ரத்து செய்து லோகநாதனை பணியில் நீடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *