சென்னை, ஏப். 4– ‘‘தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு வரும் தேர்தலிலும் பெரு வெற்றியைத் தரும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிபட தமது முக நூலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது முக நூலில் பதிவிட்டிருப்பதாவது:–
தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெரு வெற்றியைத் தரும்!
தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் NDA கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே record!
NEET, CAA, NEP, கீழடி, கோவை மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் துரோகப் பட்டியல்தான்!
ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டி யல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல்.
Dravidian Model வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வோம்! DMKManifesto 2026 அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டு சேர்த்து வெல்வோம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
