ஒன்றிய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு ‘டி.ஜி.பி.’ மாற்றம் சி.பி.அய். மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.4 ஒன்றிய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ஒன்றிய அரசின் அழுத்தத்தால் காவல்துறை தலைமை இயக்குநர்  வெங்கட்ராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், 2 மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.இவர்களுடன் மேலும் பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

அரசியல் சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நேர்மையாக, நடுநிலையாக தேர்தலை நடத்துவதற்கும் எதிரானது. ஒன்றிய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச போக்குகளை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிட வேண்டும்ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனைக் குறைப்பு ஆகியவற்றில் ஆளுநர்களின் தலையீடு பற்றிய உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

‘ஆளுநர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, அமைச்சரவையின் ஆலோசனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தண்டனை தளர்வு, மன்னிப்பு போன்ற அதிகாரங்கள் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பங்கள் அல்ல. அவை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியவை’ என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது ஜனநாயகம், அரசியலமைப்பு ஆட்சி மற்றும் மாநில உரிமைகளுக்கான ஒரு முக்கிய வெற்றி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *