டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திராவிட மாடல் ஆட்சிக்கு மீண்டும் வாக்களிக்க மக்களிடம் வேண்டுகோள், நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக ஆட்சியின் கீழ் நாட்டில் ஜனநாயகம் சிதைந்து வருகிறது: அசோக் கெஹ்லோட் குற்றச்சாட்டு. “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஆட்சி மிகவும் ஆபத்தானது. நீதித்துறையின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பலவீனமான ஜனநாயகம் வருங்காலத் தலைமுறையினரையும் நாட்டையும் மோசமாகப் பாதிக்கும் என கவலை.
* ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி: இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) போராட்டம்
தி இந்து:
* எஃப்சிஆர்ஏ (FCRA) மசோதா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கவலை; ‘கடுமையானது’ (DRACONIAN) என விமர்சனம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெளிநாட்டு பங் களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026’ (FCRA AMENDMENT BILL) குறித்துத் தனது ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் வெளிப்படுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்.
தி டெலிகிராப்:
* எல்.பி.ஜி. கேஸ் நெருக்கடியால் இடம் பெயரும் உ.பி., பீகார் மாநில தொழிலாளர்கள்: எல்பிஜி (சமையல் எரிவாயு) நெருக்கடியின் காரணமாக, நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும், பெருமளவிலான வெளியூர் மாணவர்களும், டில்லி போன்ற நகரங்களில் இருந்து நாள்தோறும் வெளியேறி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சிறப்புக் கூட்டத்தொடர் ‘தேர்தல் நடத்தை விதி மீறலே’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு – ஏப்ரல் 16 முதல் 18 வரை ‘நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரை’ கூட்டுவது தேர்தல் நடத்தை விதி மீறலே என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இந்த மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை பயன்படுத்தி தேர்தல் முடிவுகளைப் பாதிக்க பாஜக முயல்வதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
– குடந்தை கருணா
