பருவகால தொற்று நோய்கள் : முகக்கவசம் அணியுங்கள் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

2 Min Read

சென்னை, நவ.26 பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப் புகளுடன் மருத்துவமனை களை நாடுவோரின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது.

புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற் போது பரவி வருகிறது.  நேரடியாக நுரையீரலைப் பாதிக் கக் கூடியது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள் ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவ மனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

மற்றொருபுறம் மருத்துவர்கள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனை களோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயா ளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவர்கள், கர்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு ‘ஓசல்டா மிவிர்’ எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களை அதீத கவனத் துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீர்அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்த வேண்டும். ‘ஓசல்டாமிவிர்’ உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவ மனையில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

மருத்துவத்துறையினர், சுகாதாரக் களப்பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங் களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *