வாக்குகளைப் பிரித்து வெற்றி பெறுவதற்காக பி.ஜே.பி. விரித்த வஞ்சக வலையில் த.வெ.க. சிக்கிவிட்டது! இரா.முத்தரசன் விமர்சனம்!

1 Min Read

திருவாரூர், ஏப். 4- தமிழ்நாட்டில் வாக்குகளைப் பிரித்து வெற்றி பெறுவதற்காக பாஜக விரித்த வஞ்சக வலையில் தவெக விழுந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று (3.4.2026) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வேட்பு மனு உறுதிமொழி பத்திரத்தில், அப்பாவுக்கு கடன் கொடுத்தேன், அம்மாவுக்கு கடன் கொடுத்தேன், மனைவிக்கு கடன் கொடுத்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை இப்படி ஒரு விசயத்தை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் சொன்னதாக நான் கேள்விப்பட்டது இல்லை. நடிகர், நடிகைகளைப் பார்ப்பதற்காக கூட்டம் வரத்தான் செய்யும். பார்க்க வரும் கூட்டம் வேறு, பேச்சைக் கேட்க வரும் கூட்டம் வேறு. தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரும் கூட்டம் பேச்சைக் கேட்க வரும் கூட்டம். பல சித்து வேலைகள் செய்து வாக்குகளை பிரித்து தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து விடலாம் என்று பா.ஜ.க. எண்ணுகிறது.

அந்த வஞ்சக வலையில், விஜய்யின் தவெக-வும் விழுந்துவிட்டது. ‘ஜனநாயகன்’ திரைப் படம் வெளியில் வராமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றிய அரசின் சென்சார் போர்டு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதற்கு திமுக அரசை விஜய் விமர்சனம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *