தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது! – செங்கோட்டையன்

1 Min Read

கோபி, ஏப்.4- கோபி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (3.4.2026) பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க. இயக்கத்திற்காக 45 ஆண்டுகாலம் பாடுபட்டவன் நான். ஆனால், துளியும் யோசிக்காமல் என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்தார்கள்.
அரசியல் வரலாற்றில் யாரை அடையாளம் காட்டினேனோ அவரே என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்து இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; இந்த இயக்கத்திற்கு நான் உழைத்த உழைப்பு என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அரும்பணியாற்றி இருக்கிறேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை தவிர தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது. மற்றவருக்கு அந்தத் தகுதி இல்லை என்பதை என்டிஏ கூட்டணியில் இருக்கிற அத்தனை பேரும் அறிவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *