கட்சியின் முடிவு எதுவாயினும் ஏற்றுக்கொள்வதே சிறந்த அறமாகும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத வி.சி.க. ஆளுர் நவாஸின் கொள்கைப் பார்வை

2 Min Read

சென்னை, ஏப். 4- விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸுக்கு 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், அது குறித்து அவர் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 இடங்களைச் சேர்த்து 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஒரு முறை கூட வாய்ப்பு பெறாத வர்களும் கருத்தில் கொள்ளப்பட்டதாகவும், ஆளூர் ஷாநவாஸுக்கு நாகை தொகுதியை ஒதுக்காதது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலர் இருப்பதால் இந்த முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக திருமாவளவன் தெரிவித்து உள்ளார். மேலும் மூவரும் தங்களுடைய வருத் தங்களை வேதனைகளை தன்னிடத்தில் நேரிலே வந்து வெளிப்படுத்தலாம் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக விசிக துணைப் பொதுச் செய லாளர் ஆளூர் ஷாநவாஸ் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துகளில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன். இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர் களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட 8 வேட்பா ளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிக வின் குரல் வலுவாக ஒலிப் பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமை வதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடு படுவோம்.

எனது பொது வாழ்க் கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *