கிறிஸ்தவ அமைப்புகள் மீது தாக்குதலை ஏற்படுத்துவதா? ஒன்றிய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்.4- கிறிஸ்தவ அமைப் புகள்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுஇருப்பதாவது:-

ஒன்றிய அரசின் வெளி நாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) (எப்.சி.ஆர்.ஏ.) சட்ட திருத்த மசோதாவை நாடா ளுமன்றத்தில் அறிமுகப்படுத் தியிருப்பது குறித்து, ஆழ்ந்த வேதனையுடனும், கவலை யுடனும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த மசோதாவின் பல அம்சங்கள், இந்தியா முழுவதிலுமுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரை கொந்தளிப்பு மற்றும் மனவ ருத்தத்திற்குள் ஆழ்த்தி இருக்கிறது. அந்த அம்சங்கள் எவை என்றால்,

எப்.சி.ஆர்.ஏ. பதிவில், நடைமுறை காலதாமதம், நிர் வாக மறுப்பு அல்லது அரசு உரிய நேரத்தில் செயல்படத் தவறுதல் போன்ற காரணங் கள் கூட ஒரு அமைப்பின் பதிவை தானாகவே ரத்து செய்துவிடும்.

சொத்துகள் பறிமுதல்

பதிவு ரத்து செய்யப்பட் டாலோ அல்லது உறுதி செய் யப்படாததாக கருதப்பட் டாலோ, முழு வெளிநாட்டுப் பங்களிப்பு நிலுவைத்தொகையும், பள்ளிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், நிலம் மற்றும் கட்டடங்கள் உள்பட அந்த நிதியிலிருந்து உருவாக் கப்பட்ட ஒவ்வொரு சொத் தும், அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப் பட்டுவிடும்.

பதிவை புதுப்பிக்கும் செயல்முறையே தெளிவற்ற தாகவும், வெளிப்படைத்தன் மையற்றதாகவும், தன்னிச்சை யானதாகவும் உள்ளது. குறை பாடுகளை தெரிவிக்க மறுப் பது அல்லது நியாயமான விசாரணைக்கு வாய்ப்பளிக்காதிருப்பது போன்றவை, சம்பந்தப்பட்ட அமைப்புக ளுக்கு இயற்கை நீதியை மறுப்பதாக உள்ளது. வெளி நாட்டுப் பங்களிப்புகளுட னும், உள்நாட்டு ஆதாரங்களில் இருந்தும், உருவாக்கப்பட்ட சொத்துகள் முழுமையாகப் பறிமுதல் செய்யப்படும் என்ற விதிமுறை இன் னும் அதிக கவலையளிப்பதாக உள்ளது.

சட்ட தாக்குதல்

இந்த கொடுமையான மசோதா மூலம் ஒன்றிய அரசு தனது விருப்பப்படி, எந்த வொரு முறையான சட்ட நடைமுறையும் இல்லாமலேயே, தேவாலயம், பள்ளி அல்லது மருத்துவமனை என எந்தவொரு சொத்தின் எப். சி.ஆர்.ஏ.பதிவை ரத்து செய்ய வும், அதன் சொத்துகளை கையகப்படுத்தவும் அதிகாரம் அளிக்கப் படுகிறது. இதனால் இந்தியாவின் தொண்டு நிறுவனங்கள் சிதைக்கப்படும்.

எனவே, இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் 25, 29, 30 மற்றும் 300-ஏ ஆகிய பிரிவுகளுக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது. மேலும் இது சிறுபான்மை யினரால் நடத்தப்படும் நிறுவ னங்கள் மீதான சட்டப்பூர்வ மான தாக்குதலாகும்.

பெரும் அச்சுறுத்தல்

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற ஏழைகள் உள்பட விளிம்புநிலைப் பிரி வினருக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை வழங்கும் தொண்டு நடவடிக்கைகளுக்கான நிதி யுதவியை முற்றிலுமாகத் துண்டிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு நிதியைச் சார்ந்துள்ள தொண்டு நிறுவனங்களுக்கு இந்த மசோதா, பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. இதனால், உடன டியாக பாதிக்கப்படுபவர்கள், அந்த நிறுவ னங்கள் மட்டு மல்ல, கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக இந்த நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் லட்சக்க ணக்கான நலிவடைந்த குடி மக்களும் அடங்குவார்கள்.

மசோதாவை திரும்ப பெற வேண்டும்

இந்த அமைப்புகளால் வழங்கப்படும் கல்வி, மருத்துவம் மற்றும் தொண்டு சேவை களுக்கு மாற்றாக ஒன்றிய அரசிடமோ அல்லது மாநிலங்களிடமோ திறன் இல்லை. இதன் விளைவாக, நாடு, முழுவதும் அடித்தள நல உள் கட்டமைப்பு சரிந்துவிடும். மத சுதந்திரம் மற்றும் சமூக தொண்டு ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்த மசோதா.

இந்த சட்டம் இயற்றப்பட்டால், அது இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் மனிதாபிமானப் பாரம்பரி யத்தில் ஒரு நிரந்தர வடுவை ஏற்படுத்திவிடும். எனவே 5 இந்த மசோதாவை உடனடி யாக திரும்பப் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *