ஹோல்கரின் வாரிசுகள் இன்றும் உள்ளனரா? உணவகங்களில் அரங்கேறும் வர்ணாசிரம ஜாதிய மேலாதிக்கம்!

வரலாற்றின் இருண்ட பக்கங்களாக நாம் கருதிய பல கொடுமைகள், நவீன உலகின் முற்போக்கு முகமூடிக்குப் பின்னால் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

17ஆம் நூற்றாண்டில் இந்தூரை ஆண்ட ஹோல்கர் வம்சத்தினர் காலைக்கடன் கழிப்பது  முதல் இரவு படுக்கச் செல்லும் நேரம் வரை, பார்ப்பனர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் நேரத்தில்தான் செல்வார்கள்.

ஹோல்கர் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான தீண்டாமைக் கொடுமைகள் இருந்தன. அதே காலகட்டத்தில்தான் மகாராட்டிராவில் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கழுத்தில் சிறிய பானையை எச்சில் துப்புவதற்கும், அவர்களது இடுப்பில் விளக்குமாற்றைக் கட்டி அவர்களின் கால்தடத்தை அழித்துக்கொண்டே செல்லவும் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டமாகவே இருந்தது.

இந்தூரில் ஒடுக்கப்பட்ட மக்கள் குளம், கிணறு, ஓடை, வாய்க்கால் நீரைப் பயன்படுத்தத் தடை இருந்தது. இதற்காக அவர்கள் காடுகளுக்குள் சென்று விலங்குகள் குடிக்க, நாடோடிகள் அமைத்த குட்டையில் தான் தண்ணீர் புழங்க வேண்டும்; நகரங்களில் உயர்ஜாதியினர் பயன்படுத்தும் கழிவு நீர் குட்டைக்கு அருகில் குழி தோண்டி அதில் ஊறிவரும் நீரைப் பயன்படுத்தவேண்டும் என்று கொடூர சட்டங்கள் இருந்தன.

அதே ஹோல்கர்களின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறதா என்னும் கேள்வி எழுந்துள்ளது. பெங்களூருவில், ஒசூர் சாலையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இலையில் அனைத்து உணவும் வைத்த பிறகு பார்ப்பனர்கள் வந்து சமஸ்கிருத மந்திரம் ஓதி, தண்ணீரைத் (ஜலத்தை) தெளித்த பிறகு, அவர்கள் சில கவளம் அள்ளி வாயில் போட்ட பிறகுதான் அன்றைய உணவு விநியோகம் துவங்குமா.ம்

இது தொடர்பான காணொலிகள் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன.  இவர்கள் முறையாகச் செய்வது என்றால் அதாவது சாஸ்திரங்களின்படி நாலாம் தர வர்ணத்திற்கு உயர்ஜாதியினர் அமர்ந்த இருக்கையில் உட்கார்ந்து உணவு அருந்தச் சொல்வது சாஸ்திர விரோதமாகும். ஆகவே இந்த உணவு விடுதியில் உயர்ஜாதியினருக்கு தனி இடமும், சாப்பிடவரும் இதர ஜாதியினருக்கு தனி இடம் என்று உள்ளதா?

அப்படி இல்லை என்றால் பார்ப்பனர்களை அழைத்து வந்து சாப்பாட்டை ஏச்சில் செய்து அதாவது சுவைத்துப் பார்த்து துவங்கச் சொல்வது மத நம்பிக்கை கொண்டமக்களை ஏமாற்றும் செயலாகும்

இப்படி மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி தான் வணிகம் செய்யவேண்டுமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *