நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
புதுடில்லி, ஏப். 7 நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது. நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறா மல் தொடர்ந்து முடங்கி வருகிறது. ராகுல் காந் தியின் லண்டன் உரை தொடர்பாக ஆளுங்கட்சியினர் அமளியில் இறங்கியதால் கூட்டத்தொட ரின் தொடக்க நாட்களில் இரு அவைகளும் முடங்கின. அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேட்டு எதிர்க் கட்சிகளும் போர்க்கோலம் பூண்டு வருவதால் அவை முடக்கம் நீடிக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இந்த நிலையில், நாடளுமன்றத்தின் இரு அவை களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.