புதுடில்லி, ஏப்.7 நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு முடிவடைந்த நிலையில், 2-ஆவது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு சிந்தனை அமைப்பு ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை, நிர்ணயிக் கப்பட்ட கால அளவான 133 மணி நேரத்துக்கு பதிலாக, வெறும் 45 மணி நேரம்தான் செயல் பட்டது. மாநிலங்களவை 130 மணி நேரத்துக்கு பதிலாக 31 மணி நேரம்தான் இயங்கியது. அதாவது, மக்களவை 34.28 சதவீத நேரமும், மாநிலங்களவை 24 சதவீத நேரமும் இயங்கி உள்ளது. இரு அவைகளிலும் அடிக்கடி கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் வெறும் 4 மணி 32 நிமிடங்களும், மாநிலங்கள வையில் 1 மணி 55 நிமிடங்களும் மட்டும் கேள்வி நேரம் நடந்தது. ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை மீது மக்களவையில் 14 மணி 45 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது. 145 எம்.பி.க்கள் அதில் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் மீது 13 மணி 44 நிமிட நேரம் விவாதம் நடந்துள்ளது. 143 எம்.பி.க்கள் பங்கேற்றுள் ளனர். மக்களவையில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 29 கேள்விகளுக்கு வாய் மொழியாக பதில் அளிக்கப்பட்டது.
மக்களவை மொத்தம் இயங்கிய நேரம் வெறும் 34 சதவீதம்தான்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books