சென்னை, நவ.5 சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண் டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மின்சாரத் துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, அனைத்து இயக் குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த மாவட்ட தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை அமைச் சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டார். கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச் சர் விடுத்துள்ள உத்தரவுகள்:
* மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மய்யத்துடன் ஒருங் கிணைந்து 24 மணி நேரமும் உதவி செயற்பொறியாளர்களை நியமித்து பணியாற்றிட வேண்டும்.
* தமிழ்நாட்டில் ஒரு குழுவிற்கு 15 பணியாளார்கள் வீதம், மொத்தம் 5,000 பேர் 24 மணி நேரமும் மின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* பொதுமக்கள் மின்தடை சம்பந்த மான புகார்களை 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மய்யமான மின்ன கத்தின் தொடர்பு எண்ணான 94987 94987 வாயிலாகவும் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மய்யம் வாயிலாகவும் தெரி விக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு உத்தரவிடப்பட் டுள்ளது.