அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Viduthalai
3 Min Read

 வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள 

100 கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலா

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப். 7- சட்டப்பேரவையில் 5.4.2023 அன்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: 

இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை விரிவாக்க மய் யங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும். வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ், பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட அனைத்து துறைத் தலை வர்களுக்கு பணி நிலை மேலாண்மை அதிகாரம் வழங்கப்படும்.

நெல் உற்பத்தியை அதிகரிக்க துத்த நாக சத்தைக் கரைத்துக் கொடுக்கும் திரவ உயிர் உரத்தை இரண்டு இலட்சம் ஏக்கருக்கு 50விழுக்காடு மானியத்தில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்படும். கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு 50விழுக்காடு மானியத்தில் காட்டுப் பன்றி விரட்டி மருந்து ரூ. 45 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகள் வெளி மாநிலங்களுக்கு கண்டுணர் சுற்றுலா

கரும்பு சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை நேரில் அறிந்து கொள் ளும் வகையில் 100 கரும்பு விவசாயி களை வெளிமாநிலங்களுக்கு கண்டு ணர் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 2000 கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் தொழில்நுட்பப் பயிற்சி வழங் குவதற்கு ரூ.30 லட்சம் செலவிடப்படும். கள்ளக்குறிச்சி 2, பெரம்பலூர், செங் கல்வராயன் சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு புதிய உருளை ரூ. 1 கோடியே 18 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும். திருப்பத்தூர், சேலம், மதுராந்தகம், எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு காற்றழுத்த இயந்திரமும், கள்ளக்குறிச்சி 2, எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருவழி மய்யப்படுத்தப் பட்ட உயவு அமைப்பு தலா ரூ.85 லட் சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

மரவள்ளி மகசூலைப் பெருக்க நடவுக்குச்சிகள், உரம், பயிர்ப் பாது காப்பு, நடவுக்குச்சி வெட்டும் கருவி களுக்கு மானியம் வழங்கி ரூ. 2 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கப்படும். தோட்டக் கலைப் பயிர்களில் சந்தை சார்ந்த தொழில்நுட்ப முறைகளை துல்லிய மாக செயல்படுத்துவதற்காக தோட்டக் கலை தொழில்நுட்ப அலுவலர்கள் வேளாண் விற்பனை வேளாண் வணி கத் துறையில் சிறப்பு பணியமர்த்தப் படுவார்கள். தேசிய மின்னணு வேளாண் சந்தை உத்திகள், பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து வேளாண்மை தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தோட்டக்கலை இடபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 20 வட்டாரங்களில் தோட்டக்கலைக் கிடங்குகள் 1 கோடி செலவில் கட்டப் படும்.

திருச்சியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மய்யத்தினை வலுப்படுத்திட ரூ.3 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண்மை இயந்திர வாடகைத் திட் டத்தினை வட்டார அளவில் கொண்டு செல்லும் வகையில் 15 வேளாண் இயந்திரக் கூடங்கள் ரூ.2 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட் களை சந்தைப்படுத்திட அரசு வணிக வளாகங்களில் சந்தை இணைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். கன்னி யாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயிறு, கரூர் சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை ஆகிய அய்ந்து வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திண்டுக்கல் கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங் களில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.78 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் சுனைநீர் வடிப்பகுதி மேம்பாட்டுக்கான திட்டம் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

மாநில அளவிலான வேளாண் கண் காட்சி திருச்சியிலும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள், வாழை, மலர்க ளுக்கான கண்காட்சி சென்னையிலும் பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியி லும் நடத்தப்படும்.

-இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பில் குறிப் பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *