திருப்பத்தூர், ஏப்.2- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 31.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) தலைமை வகித்தார். சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) வரவேற்றார். பெ.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.
இக் கூட்டத்திற்கு வருகைபுரிந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, இம்முறையும் தி.மு.க. சார்பில் போட்டியிட தேர்வாகியுள்ள எ.நல்லதம்பி அவர்கள், “நான் திருப்பத்தூர் நகர சட்டமன்ற உறுப்பினாராக தேர்வாகி என்னென்ன திட்டங் களை நிறைவேற்றினேன் என்றும், மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை நிறைவேற்ற மூன்றாவது முறையாக தேர்வு செய்ய தங்களின் ஆதரவு தேவை” என்றும், “தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நம் பெரியார் மண்ணின் காலுன்றாமல் இருக்க, தமிழ்நாட்டின் முதலமைச்சாராக மீண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தேர்வு செய்து மதச் சார்பற்ற, சமூக நீதி, சமத்துவ ஆட்சியை மலர வழிவகைச் செய்ய ஆதரவு தாருங்கள்” என்று உரையாற்றினார்.
இக் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்: எ.அகிலா (மாநில மகளிரணிப் பொருளாளர்), கமலம்மாள் (கழகக் காப்பாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), காளிதாஸ் (நகரத் தலைவர்), எம்.ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்), வ.புரட்சி (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்), எம்.பெருமாள்சாமி (விடுதலை வாசகர் வட்டம்), ஏ.டி. சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), இரா.கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி), தாமரை (நகர காப்பாளர், மகளிரணி), நா.சுப்புலட்சுமி, சி.சபரிதா (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்), வெ.அன்பு (மாவட்டத் தலைவர், ப.க), பெ.ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்), இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்), கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர், ப.க.), மோ.நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), கே.மோகன் (மாவட்ட தலைவர், பெ. கட்டுமான தொழிலாளரணி), க.நிரஞ்சன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்), அக்ரி அரவிந்த் (நகர இளைஞரணிச் செயலாளர்), மு.வெற்றி (மாதனூர் ஒன்றியத் தலைவர்), சே.வெங்கடேசன் (மாவட்ட ஒன்றியச் செயலாளர்), கோ.சங்கர் (சுந்தரம்பள்ளி கிளைத் தலைவர்), சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத்தலைவர்), லட்சுமணன்(லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்), பிரபாகரன் (கற்பிபயிலகம்) ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட மூன்றாவது முறையாக தேர்வு செய்யபட்டமைக்கு தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தேர்வாகிய எ.நல்லதம்பி அவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் சமூகநீதி காவலர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர திருப்பத்தூர் நகர சட்டமன்ற உறுப்பினராக எ.நல்லதம்பி அவர்கள் வெற்றி பெற உறுதி ஏற்று களப்பணிகளையும், பிரச்சாரங்களை மேற்கொள்வது.
நிறைவாக தோழர் காளிதாஸ் (நகர தலைவர்) வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
நாள் கூட்டம் நடைபெறும் இடம் சொற்பொழிவாளர்
4.4.2026 சனி மாலை 6 மணி நெய்வாசல் பொறியாளர் தே.நர்மதா
6.4.2026 திங்கள் மாலை 6 மணி மேல உளூர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி
8.4.2026 புதன் மாலை 6 மணி ஒரத்தநாடு தெற்கு முஸ்லிம் தெரு இராம.அன்பழகன்
10.4.2026 வெள்ளி மாலை 6 மணி கோவிலூர் பாலம் வழக்குரைஞர் மு.இளமாறன்
20.4.2026 திங்கள் இரவு 7 மணி ஒரத்தநாடு பேருந்து நிலையம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
