மதுரை சிந்தனை மேடை நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – நூல்கள் அறிமுக கூட்டம்

2 Min Read

மதுரை, ஏப். 2- மதுரை சிந்தனை மேடை சார்பாக தொண்டறத்தாய் மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் நூல் அறிமுக விழா, மதுரை கீழமாசி வீதியில் உள்ள பெரியார் மய்யத்தில் 15.03.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

மாவட்ட கழக மகளிரணி தலைவர் க.நாக ராணி அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த் தினார். நிகழ்வுக்கு தலைமை ஏற்ற மதுரை சிந்தனை மேடையின் தலைவர் ஜெ.வெண்ணிலா அன்னை மணியம்மையார் அவர்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் நூல்கள் பற்றியும், திராவிட இயக்கம் படைப்பாளி களால், படிப்பகங்களால் வளர்ந்த இயக்கம் என்பதையும் குறிப்பிட்டு முனைவர் வா.நேரு தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் இராம.வைரமுத்து எழுதிய ‘திராவிடம் வென்றது’ என்னும் கவிதை நூலினை அறிமுகப் படுத்தி, மாநில மாணவர் கழகத் துணைச்செயலாளர் சீ.தேவராஜ் பாண்டியன் உரையாற்றினார்.

பல கவிதைகளைக் குறிப்பிட்டு ,திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றி சிறப்பாகப் பாடும் கவிதை நூல் இது என்று பாராட்டி உரையாற்றினார். தொடர்ந்து சொ.நே.அன்புமணி எழுதிய ‘அலைகளிலிருந்து தீண்டப்பட்ட காலடிகள்’ என்னும் சிறுகதை நூலினை பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பா.சடகோபன் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.ஒரு சிறுகதையை முழுமையாகச் சொல்லி அதன் சிறப்புகளைக் குறிப்பிட்டு ,மற்ற கதைகளைப் பற்றியும் குறிப்பிட்டு தனது ஆலோசனைகள் சிலவற் றையும் கூறி உரையாற்றினார்.

தொடர்ந்து சொ.நே.அன்பு மணி ஏற்புரையாற்றினார். தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வு களை வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை, மிகச் சிறப்பாக நூல் அறிமுகவுரை ஆற்றிய பா.சடகோபனுக்கும் இப்படி ஒரு நூல் அறிமுக விழாவை நடத்தியதற்கு மதுரை சிந்தனை மேடை அமைப்பிற்கும்,அதன் தலைவர் ஜெ.வெண்ணிலா அவர்களுக்கும், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வத் திற்கும் நன்றி என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து எழுத்தாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து, இந்தக் கவிதைகள் விடுதலை ஞாயிறு மலர், உண்மை, கருஞ் சட்டைத் தமிழர் போன்ற இதழ்களில் வெளிவந்தவை. இந்த நூலினை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் காரைக்குடியில் வெளியிட்டார்கள் எனக்குறிப்பிட்டு, மிகச்சிறப்பாகத் தன் நூலினை திறனாய்வு செய்த தேவராஜ்பாண்டியன் அவர்களுக்கு பாரட்டுகளும் நன்றியும் தெரிவித்து உரையாற்றினார்.தொடர்ந்து எழுது என்று தன்னை ஊக்கப்படுத்தும் நிகழ்வு இது என்று நெகிழ்வாகக் குறிப்பிட்டார்.

நிறைவாக திராவிட மகளிர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் பெரி.பாக்கியலெட்சுமி நன்றியுரை கூறினார். நிகழ்வில் தொலைதொடர்பு தொ.மு.சங்கத்தின் தலைவர் ஆ.செல்லப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வீர.பழனி வேல்ராஜன், கழகப் பேச்சாளர் மதுரை அ.வேல்முருகன், ஸ்டுடியோ சரவணன், அழகுபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூல் ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டி, நிகழ்வினை தலைமை செயற்குழு உறுப் பினர் மதுரை வே.செல்வம் ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *