திரு.வி.க.நகர், ஏப்.2- கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பெர வள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம்
வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்துக் குட்பட்ட பெரம்பூர் தொகு தியில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் வேட் பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை பெரம் பூர்தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலரிடம் 30.3.2026 அன்று விஜய் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தை பெரம்பூரில் தொடங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர்தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சார்பில் போட்டியிடும் வி.எஸ்.பாபுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார்
இதையொட்டி கொளத்தூ ரில் விஜய் வருவதை அறிந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை விஜய், தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து திரும்பினார்.
இந்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உதவி கணக்கு அலுவலர் குமார். பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே விஜய் நிகழ்விடம் வந்த தாகவும், பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட 5 ஒலி பெருக்கிக ளுக்கு பதிலாக சுமார் 30 ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.
காவல் துறையினர் விசாரணை
மேலும், 300 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சுமார் 5 ஆயிரம்பேர் கூட்டத் தில் பங்கேற்றதால் பொதுமக் கள் மற்றும் வாகன ஓட்டிக ளுக்கு இடையூறு ஏற்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த புகாரின் பேரில் பெரவள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
