ஜெனீவா, ஏப். 7- இந்த ஆண்டு உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126ஆவது இடம் அளிக்கப் பட்டுள்ளது. அய்க்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு, சமூக, பொருளாதார தகவல்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப் பட்டிருந்தது.
மேலும், சமூக ஆதரவு, வருவாய், ஆரோக்கியம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலின்மை ஆகிய 6 முக்கிய காரணிகளும் கணக்கில்கொள்ளப்பட்டிருந்தன. இவ் வாறு மூன்றாண்டு காலத்தில் திரட்டப்பட்ட தகவல்களில் சராசரி அடிப்படையில் மகிழ்ச்சி மதிப்பெண் அளிக்கப் பட்டிருந்தது.
அந்த வகையில், உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் 146 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 126ஆவது இடமே கிடைத்துள் ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நம் நாடு பெற்ற 136ஆவது இடத்துடன் ஒப்பிடும்போது இது 10 இடங்கள் முன் னேற்றம் என்றபோதும், பிரச்சினைகளில் தவிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (108ஆவது இடம்), இலங்கையைவிட (112) பின்தங்கியே உள்ளது.