எல்லாம் ‘டூப்’தானே!
* கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில், கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை.
– ராஜ்நாத்சிங்,
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர்
>> கடவுளுக்குப் பாதுகாப்பு தேவை என்றால், கடவுள் சக்தி என்று சொல்லுவது எல்லாம் ‘டூப்’தானே!
எதையும் செய்வார்கள்!
* தமிழ்நாட்டின் பெயரைக்கூட மாற்றத் தயங்காது பி.ஜே.பி. ஆட்சி.
– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
>> மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றவில்லையா?
பெரும்பாலும்…
* மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூபாய் இரண்டு லட்சம் கோடியாக உயர்வு.
>> பெரும்பாலும் டபுள் இன்ஜின் மாநிலங்களின் காட்டில் தான் மழை!
