7.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
👉ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துவதையும் அதே போன்று, ஊடகமும் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படை உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணி வேர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
👉 ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாகரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாக கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான பகுதியான ஜம்மு & காஷ்மீரில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் படேல் எனும் ஏமாற்றுப் பேர்வழி, இந்த ஆண்டு மார்ச் வரை ஆறு மாதங்களுக்குள், தலா மூன்று முதல் அய்ந்து நாட்களுக்குள், நான்கு முறை விஜயம் செய்துள்ளான். பல இளநிலை அதிகாரிகளைத் தவிர குறைந்தது இரண்டு அய்ஏஎஸ் அதிகாரிகளைச் சந்தித்துள்ளான். முக்கிய அர சாங்க அதிகாரிகளுடன் குறைந்தது மூன்று குஜராத் தொழில திபர்களுக்கான சந்திப்புகளை நிர்ணயித்தது; மற்றும் உள்ளூர் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்கள் துணையுடன் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தி டெலிகிராப்
👉என்.சி.இ.ஆர்.டி. வகுத்துள்ள பாடத் திட்டத்தில் 1984இல் டில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து பாடம் உண்டு. ஆனால் 2000 பேர் வரை கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரம் நீக்கம்.
👉ஜவஹர்லால் நேருவின் நவீன இந்தியா பற்றிய தொலைநோக்கு, ஜாதிய ஏற்றத்தாழ்வு பற்றிய விமர்சனம் அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கு வதற்கான பாதை ஆகியவையும் நீக்கம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
👉டில்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக்கிற்கு தேசிய கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
– குடந்தை கருணா