வணிக எரிவாயு உருளை ரூ.6,500..
அதிர்ச்சி தகவல் வெளியானது
வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், சென்னையில் தட்டுப்பாடு காரணமாக வணிக எரிவாயு உருளை கள்ளச் சந்தையில் ரூ.6,500 வரை விற்கப்பட்டு வருவதாக உணவகம் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உணவு பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
சுங்க கட்டண உயர்வு மக்களை
சுரண்டும் செயல் : காங்கிரஸ்
சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசியப் பொருள்களில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயல் எனவும் சாடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் எனவும் கூறியுள்ளது.
லிவ்-இன் உறவில் இருந்தாலும் இணையரே
நாடு முழுவதும் இன்று (1.4.2026) முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. இந்நிலையில் நிலையான லிவ்-இன் உறவில் இருக்கும் இணைகள், மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘திருமணமானவர்கள்’ என பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இருவரும் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாக தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
