அயோத்தி அல்ல – அய்யோ தீ!

1 Min Read

அயோத்தி, ஏப்.1- அயோத்தியில் ராம நவமி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மகா யாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள ஜம்தாரா படித்துறையில், தபஸ்வி சாவ்னி சார்பில் லட்சுமிநாராயண மகா யாகம் நடைபெற்று வந்தது.

சடங்குகள் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, யாக குண்டத்திலிருந்து கிளம்பிய தீப்பொறி திடீரென பந்தலில் பற்றி எரியத் தொடங்கியது. யாகசாலை பந்தல் தர்ப்பைப் புற்கள், மூங்கில் மற்றும் துணிகளால் அமைக்கப்பட்டிருந்ததால் தீ மின்னல் வேகத்தில் பரவியது.

சுற்றுச்சூழல் தாக்கம்: யாகத்தில் பயன்படுத்தப்பட்ட நெய் மற்றும் அப்போது வீசிய பலத்த காற்று, தீயை மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவச் செய்தது. விபத்து நடந்த சமயத்தில் உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங் மற்றும் பல உயர் அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்தனர்.

தீ பரவத் தொடங்கிய உடனேயே பாதுகாப்புப் படையினர் மற்றும் அங்கிருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, பக்தர்கள் மற்றும் சாமியார்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். யாகத்திற்காக வைக்கப்பட்டிருந்த லட்ச்சக்கணக்கான மதிப்புள்ள பூஜைப் பொருட்கள் மற்றும் தற்காலிக பந்தல் முழுமையாக எரிந்து சாம்பலானது.”

கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அயோத்தியில் ராமன் கோயில் கட்டி என்ன பயன்? ராமனுக்குச் சக்தியிருந்தால் இதெல்லாம் நடக்குமோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *