பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு

1 Min Read

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் உயர் வெடிபொருள் தொழிற்சாலை. மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்கள் வருமாறு :

பணியிடங்கள் : சூப்பர்வைசர் (கெமிக்கல்) 6, ஸ்கில்டு வொர்க்கர் 85 என மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : அய்.டி.அய்., / பி.இ., / பி.டெக் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 வயது முதல் 40 வயது வரை

தேர்வு முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு- எழுத்து தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ddpdoo.gov.ine என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, நிறைவு செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது.

முகவரி : The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune, Maharashtra – 411 003.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.04.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *