‘தேர்வு இல்லை’ – ஆவடி தொழிற்சாலையில் 450 பணியிடங்கள்; தகுதி என்ன?

2 Min Read

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 450 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.04.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices (Engineering/ Technology)

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 150

Mechanical Engineering – 30

Electrical & Electronics Engineering – 10

Electronics and Communication Engineering – 10

Computer Science and Engineering /
Information Technology – 20

Civil Engineering – 15

Automobile Engineering – 15

Production / Metallurgy / Tool Engg. / Industrial Engg./ CAD-CAM / Mechatronics / Instrumentation / Electronics & Allied branches – 50

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை: ரூ. 18,000

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 50

Mechanical Engineering – 25

Electrical & Electronics Engineering – 7

Electronics and Communication Engineering – 5

Computer Engineering – 3

Civil Engineering – 5

Automobile Engineering – 5

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 16,200

Graduate Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 250

B.Com., – 100

BCA (Computer related) – 75

Other Degree holders (BA., B.Sc.,BBA., BBM .,) – 75

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025 ஆம் ஆண்டுகளில் BA., / B.Sc., / B.Com., / BBA / BCA படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ.18,000

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், HEAVY VEHICLES FACTORY என தேடுதல் மெனுவில் டைப் செய்து விண்ணப்பப் படிவத்தினை இணைய வழியில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *