சென்னை, ஏப். 1- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த டிசம்பர் மாதம் நடத்திய குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 30.3.2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணை கண் காணிப்பாளர் (DSP) உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்காக நடத்தப் பட்ட இந்தத் தேர்வின் அடுத்தகட்டமாக, நேர்காணல் தேதிகளையும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெற்ற காலம்: 2025, டிசம்பர்.
நேர்காணல் தேதிகள்: வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். பரிந்துரை: முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் நேர்காணல் அழைப்புக் கடிதத்தை அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்காணலின் முடிவில், மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டு பணி நியமனங்கள் வழங்கப்படும்.
