தமிழ்நாடு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

சென்னை, ஏப். 1- தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பைத் தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலக்கெடு சமூகத்தில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளின் நுழைவுநிலை வகுப்புகளில் (எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பு) சேர்க்க இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இணையதளம்: rte.tnschools.gov.inதொடக்க நாள்: ஏப்ரல் 20, 2026கடைசி நாள்: மே 18,

மாணவர் சேர்க்கைக்கான அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தனியார் பள்ளிகள் கீழ்க்கண்ட தேதிகளில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஏப்ரல் 2 அன்று பள்ளியின் மொத்த இடங்கள் மற்றும் தொடக்க நிலை வகுப்புகள் குறித்த விவரங்களைத் தயாரித்தல். ஏப்ரல் 7 – 25 சதவீத ஒதுக்கீட்டிற்கான இடங்களை பள்ளி அறிவிப்புப் பலகை மற்றும் இணையதளத்தில் வெளியிடுதல்.

ஏப்ரல் 15 அன்று விண்ணப்பம் கோரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுதல். மே 20 அன்று தகுதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப தாரர் பட்டியலை காரணங்களுடன் வெளியிடுதல்.

மே 22 அன்று விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் குலுக்கல் முறை மூலம் மாணவர்களைத் தேர்வு செய்தல் மற்றும் காத்திருப்போர் பட்டியலை வெளியிடுதல். மே 25 – 27 நாள்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்கள். மே 29 அன்று சேர்க்கை குறித்த இறுதி அறிக்கையை மாவட்ட அதிகாரியிடம் சமர்ப்பித்தல். இந்தத் திட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவது கட்டாயமாகும்.

பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது தேவையான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *