மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 1) டபுள் ஆக்சன்

1 Min Read

“காதலாகி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி என் ரட்சகரைக் கண்ட நொடியில் வாழ்வின் பயனனைத்தும் உற்றது போல் உணர்ந்து…”

இப்டி எழுதினா  அவங்களுக்கு புரியாது! புரியுற மாதிரி சொல்லுவோம்.

தமிழ்நாடு

“அண்ணாவ பாத்து எமோஷனலாகி கண்கலங்கி ஒரு பொண்ணு அழுகுது… விஜய்ணாவப் பாத்தா போதும்ன்னு இருக்குற இளைஞர்கள் பாருங்க! இளைஞர்கள், பெண்கள் கிட்ட விஜய்ணாவுக்கு எவ்ளோ மவுசு பாருங்க” அப்படின்னு பெரம்பூர் கூட்டத்த பாத்து அழுத ஒரு பொண்ணோட வீடியோ வெளிவந்தது.

அடுத்து கொளத்தூர்லயும் அதே மாதிரி விஜய் கூட்டத்துல ஒரு பொண்ணு அழுததா செய்தி வந்தது. என்னடா ஒரே சீனா இருக்கு! இந்த அளவுக்கு நம்ம மக்கள் இருக்காங்கன்னு நினைச்சு ரெண்டு படத்தையும் பார்த்தா… சீன் மட்டுமில்லை… பொண்ணும் ஒண்ணு தான்!

தமிழ்நாடு

அந்த காலத்துல மரு வச்சிக்கிட்டு வர்றதுக்கு பதிலா, ஜீன்ஸ் படத்தில வர்ற அய்ஸ்வரயா ராய் மாதிரி கண்ணாடி போட்டு டபுள் ஆக்ட்!

கண்ணாடி போட்டு ஒரு பொண்ணு… கண்ணாடி போடாம இன்னொரு பொண்ணு !

ஆனால், மேக் அப்ல விரல்ல போட்டுருக்கிற மோதிரமும், நடிப்பில் எக்ஸ்பிரஷன் எல்லாம் ஒன்னுதான். பாவம்.. டிரெய்னிங் அவ்வளவு தான் போல!

அம்மன் படங்களுக்கு மஞ்சள் சேலைகட்டி, வேப்பிலையை கொடுத்துப் பெண்களை அனுப்பி, தியேட்டர்ல சாமியாட விட்டு வசூல் பார்த்த அதே சினிமா டெக்னிக் – இப்போ அரசியல்லயும் அதையே செய்யப் பார்க்குது ஒரு கும்பல்.

சிம்ப்ளி… மாட்டிக்கிட்ட பங்கு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *