மலேசியா சா ஆலம் மாநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் அகத்தியர் ஓர் ஆராய்ச்சி மற்றும் திராவிடர் கழக நூல்களை தோழர்கள் வாங்கி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தோழர் த.பரமசிவம் முனைவர் மு.கோவிந்தசாமி ஆகியோர் உரையாற்றினார்கள். மலே சிய பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக இந்த நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நூல் வெளியீடு பேராக் மாநிலம் ஈப்போ மாநகரில் விரைவில் நடைபெற இருக்கின்றது.
