அந்நாள் இந்நாள் (1.4.2026)

1 Min Read

பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் (1.4.1972)

பாவலர் பாலசுந்தரம் பெரியாரின் சுயமரியாதைச் சுடரொளிகள் பட்டியலில் மிக முக்கியமான பன்முகத் திறன் மிக்கவராவார். எழுத்து, பேச்சு, இயக்கம் என இடையறாது வாழ்நாள் பணியாற்றிய தொண்டறச் செம்மல். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இரண்டு முறை சிறை சென்றவர். அவரது வாழ்விணையர் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களும் அவரையொத்த போராளியாக விளங்கிய திராவிடர் இயக்க வீராங்கனையாவார். தமிழ்நாட்டை பகுத்தறிவுப் பாதையில் மிக வேகமாக சிந்திக்கத் தூண்டிய பராசக்தி திரைப்படத்தின் மூலக்கதை இவருடையது. இதத்தனைச் சிறப்புக்கும் உரிய சுயமரியாதைச் சுடரொளி பாவலர் பாலசுந்தரம் அவர்கள் மறைந்த நாள் தான் 1.4.1972.

வாழ்க பாவலர் பாலசுந்தரம்!

– – – – –

சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் (1.4.1921)

உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தொடக்கத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்காதுதான் இருந்தது. பல்லாண்டுகளுக்கு பிறகே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

உலகில் நியூசிலாந்து நாடுதான் பெண்களுக்கு முதன்முதல் வாக்களிக்க உரிமை வழங்கிய நாடு எனும் பெருமைக்குரியதாகும். 1893இல் நியூசிலாந்து நாடு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி சட்டம் நிறைவேற்றியது. அமெரிக்கா கூட 1930இல் தான் வழங்கியது. ஆனால் இந்தியாவில் உள்ள சென்னை இராஜதானியில் 1921இல் ஏப்ரல் முதல் தேதி பெண்களுக்கான வாக்குரிமை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டு வரப்பட்டது. அன்றைய நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் இது நிறைவேற்றப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *