கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.3.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டிற்கும் டில்லிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது; தமிழ் நாட்டை புறக்கணிக்கும் பாஜகவை புறக்கணியுங்கள், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்: ஒவ்வொருவர் பற்றிய தகவல் பெற 33 கேள்விகள் கேட்கப்படும்.

* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கம் குறித்த நோட்டீஸ் மீது எப்போது விவாதம் நடத்தப்படும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அவைத் தலைவரிடம் கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*சிஏபிஎப் மசோதா கேடர் அதிகாரிகளை 2ஆம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தும்: இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகள் முன்மொழிந்துள்ள பல்வேறு திருத்தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் வலியுறுத்தல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேர்தல் நடைபெற இருக்கும் வங்காளத்தில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் இட மாற்றங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். பாஜகவின் தூண்டுதலின் பேரில் ஆணையம் அதிகாரிகளைத் தொடர்ந்து இடமாற்றம் செய்வதன் மூலம் தனது கைகளில் இருந்து நிர்வாக அதிகாரம் “பறிக்கப்பட்டு விட்டது” என்று மம்தா குற்றச்சாட்டு.

< மகாராஷ்டிராவில் சாமியார் மற்றும் ஜோதிடரான அசோக் கராத் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), குற்றம் சாட்டப்பட்டவர் 150-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியதாகக் கண்டறிந்துள்ளது.

தி இந்து:

* ஓபிசி இடஒதுக்கீடு ‘தவறாகப் பயன்படுத்தப்படுவதாக’ பாஜக எம்.பி. குற்றச்சாட்டு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. கருநாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்—இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளால் ஆளப்படுபவை—அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறி, முஸ்லிம் சமூகங்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தியுள்ளதாக லட்சுமண் குற்றம் சாட்டினார்.

* ‘மக்கள் நலத் திட்டங்கள் சமூக முதலீடுகள்; பொருளாதாரத்திற்கு உந்துசக்தி’. திமுகவின் தேர்தல் அறிக்கையை விளக்கிய அக்கட்சியின் தலைவர் கனிமொழி, மக்களிடம் பணம் இருக்கும் போது, அது தானாகவே அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது என்று கூறினார்.

தி டெலிகிராப்:

* எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்களுக்கு தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி. தகுதி வரம்புகளில் அளிக்கப்படும் தளர்வுகள், விண்ணப்பதாரரின் தகுதியை (MERIT) பாதிக்காது; மாறாக, அது அவர்களின் தகுதிநிலையை (ELIGIBILITY) மட்டுமே பாதிக்கும் என்றும், எவ்விதத் தடையும் இல்லாத நிலையில், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு இடையிலான இத்தகைய மாற்றம் அனுமதிக்க தக்கதே என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் நிதிஷ் குமார்: பீகார் முதலமைச்சர் பதவியை பாஜக குறிவைக்கும் நிலையில், ஜே.டி.யு தனது நிலையைத் தக்கவைக்குமா? பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதன் மீது தற்போது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *