சென்னை, மார்ச் 31- சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள செரிமான மண்டல சிகிச்சைக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான ‘மெட் இந்தியா’ மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டத்தை இம்மருத்துவமனையின் நிறுவன தலைவரும் ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மசிறீ டி.எஸ்.சந்திரசேகர் நேற்று (30.3.20206) தொடங்கி வைத்தார்.
சென்னையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அதை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கான சிறப்பு விழிப்புணர்வுத் திட்டத்தை சென்னை, ‘மெட் இந்தியா’ மருத்துவமனை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பாதிப் புக்கான சாத்தியக் கூறுகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கொலோனோஸ்கோபி பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பெருங்குடல் புற்றுநோயை வென்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (30.3.2026) நடைபெற்றது. அப்போது ‘மெட் இந்தியா’ மருத்துவமனையின் தலைவரும், செரிமான மண்டல சிகிச்சை வல்லுநருமான மருத் துவர் டி.எஸ்.சந்திரசேகர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
சமூகத்தில் பதிவாகும் புற்று நோய் பாதிப்புகளில் 20 சதவீதம் பெருங்குடல் சார்ந்தவையாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், அதாவது கரோனாவுக்குப் பிறகு அந்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னையில் பலர் பெருங்குடல் புற்றுநோய்க்குள்ளாவது எங்களது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. உடல் பருமன், துரித உணவுப் பழக்கம், உடற் பயிற்சியின்மை, மதுப்பழக்கம் புகைப்பழக்கம், உரிய நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமை ஆகியவை அதற்கான முக்கியக் காரணங்கள்.
இதைக் கருத்தில் கொண்டு ‘சி 5′ என்ற விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். அதன் கீழ் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதற்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமூக அளவிலான பரப்புரையை மேற்கொண்டு அந்நோய் தொடர் பான புரிதலை ஏற்படுத்த உள்ளோம்.
‘பெருங்குடல் புற்றுநோய்’ போன்ற ஒரு நோயை எப்படி அறிந்து கொள்வது, அதன் அறி குறிகள் என்ன? ஆரம்பத்திலேயே இந்நோயைக் கண்டறிய என்ன செய்திருக்கலாம்? இந்நோயறி தலை மேற்கொள்வதற்கு இம்மருத்து வமனை எந்த வழிமுறையைப் பயன்படுத்தியது. அதற்கான புத்தாக பரிசோதனைகள் சிகிச்சை முறைகள் குறித்து இவ்விழிப்புணர்வு திட்ட முகாமிற்கு வந்திருந்தவர்களிடம் தெளிவாக மருத்துவ வல்லுநர் மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் விளக்கினார். இதை சக மனிதர்களிடம் பகிர்ந்து இந்நோய தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தெரிவித்தார்.
சாத்தியக் கூறுகள் உள்ள 20 பேருக்கு இலவசமாக கொலோனோஸ்கோபி (ஆசனவாய் ஊடு பரிசோதனை) மேற்கொள்ளப்படும். ரூ.12 ஆயிரம் வரை செலவாகும் அந்த சோதனை கட்டணமின்றி வழங்கப்படும். அதே போன்று, தேவையான பரிசோதனைகளுக்கு 20 சதவீத சலுகை வழங்க உள்ளோம். ஜூன் மாதம் வரை இந்த சேவைகள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
12789 / 98409 93135 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
