‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்,
மனக் குகையில் சிறுத்தை எழும்’
அவர் தாம் பெரியார்,
ஈட்டி எட்டிய வரையில் பாயும், பணம் பாதாளம் வரை பாயும், எங்கள் தந்தை பெரியாரின் கொள்கைகள் அண்ட , பிண்ட, சராசரங்கள் தாண்டி, அதற்கு அப்பாலும் பாயும்,
சூத்திர மக்களின் இழிவை ஒழிக்க, அவர்களுக்கு மானமும் அறிவும் ஊட்டிய அய்யா (தந்தை பெரியார்)அவர்களைப் பற்றி, புரட்சி கவிஞர் அவர்களும், அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களும் உதிர்த்த நன்முத்தான சொற்கள் தான் மேற்கூறியவை.
இவ்விரு சொற்களும் எள்ளளவு உண்மையே. தாம் கொண்ட தலைவருக்கு உரிமையோடு பெருமை தேடித் தந்த சுயமரியாதைச் சுடர்கள்.
அவர்களின் அந்த கூற்றுகள் காலம் கடந்தும் இன்றும் வென்று வருகிறது.
அய்யாவின் கொள்கைகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
கொள்கைகள் நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.
திராவிடம் என்றால், வெற்றுப் பேச்சு அல்ல, அது அடைந்த வலிகள், சோதனைகள் சொல்லி மாளாது.
செருப்பு எறிந்தால் சிலை முளைக்கும்,கல் எறிந்தால் சொற்கள் முளைக்கும், இவைகள் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் அனுபவித்த இன்னல்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேரான அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி அவர்கள் பகுத்தறிவு கருத்துகளை மக்களிடையே விதைக்க வந்தால், கல் எறிந்தால், அதையும் தாங்கி கொண்டு ‘கல் எறிந்தால் உங்கள் வரவேற்பு என்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்’ என்று, கல் வீசியவர்களுக்கும் திகைக்கும் வகையில் சிந்தனை கருத்துக்களை விதைத்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள்.
விலங்குகள் நடக்கும் வீதியில் மனிதர்களுக்கும் நடக்கும் உரிமை பெற்று தந்தது திராவிட இயக்கம்.
முதுகு வளைந்து கும்பிடும் முறையை மாற்றி நிமிர்ந்து வணக்கம் சொல்லும் முறையை கொண்டு வந்தது திராவிட இயக்கம்.
நாதஸ்வர இசைக் கலைஞர் சிவக்கொழுந்து அவர்கள் இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போடவைத்து நாதஸ்வரம் வாசிக்க செய்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி அவர்கள்.
பனகல் அரசர் அவர்களோடு சரி சமமாக அமர்ந்து பேசும் உரிமை பெற்றவர் அழகிரி அவர்கள்.
தாம் கொண்ட தலைவர் மீது உண்மையாக, கொள் கைக்கு வலு சேர்க்கும் உரையாக தமது இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள்.
இன்றைய தலைமுறையினருக்கு திராவிடத்தின் சாதனைகள் மென்மேலும் அறிந்து கொள்ளும் வகையில், ‘தளபதி அழகிரி’ என்ற சுயமரியாதை ‘தொண்டறக் கடல்’ என்று மார்ச் 20 முதல் 27 வரை ‘விடுதலை ‘ நாளிதழில், மானமிகு ஆசிரியர் அவர்கள் எழுதியது இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது மிகவும் சிறப்பு.
திராவிடத்தின் பயனை அனுபவித்து, அதன் பலனை அடைந்து கொண்டு இன்று திராவிடத்திற்கு எதிராக கிளம்பியுள்ள , எதிரிகளையும், குழப்பவாதிகளையும், விரட்டி அடிப்போம்.
திராவிடத்தின் சாதனைகளை , அது தந்த பலனை இன்றைய தலைமுறையினர் சிந்தித்து பார்க்க தான் திராவிடர் கழகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
கல் எறிகளை தாங்கி காயத்தோடும் தமது கொள்கை முழக்கங்களை நெஞ்சுறுதியோடு முழங்கிய அழகிரி அவர்களின் 77ஆவது நினைவு நாளை, இன்றைய தலைமுறையினர் உணரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கிய மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாளும் கொள்கைக்காக அயராது உழைக்கும் ஆசிரியர் அவர்களின் வழி நடப்போம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்து மீண்டும், திராவிட மாடல் ஆட்சியை அமைக்க ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.
அறிஞர் அண்ணா,புரட்சி கவிஞர், அஞ்சா நெஞ்சன் அழகிரி, டாக்டர் கலைஞர் ஆகியோர் ஊட்டிய சிந்தனை கருத்துகளை ஏற்று எந்நாளும் அய்யாவின் கொள்கை வென்றெடுக்க உறுதி கொள்வோம்.
‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ தளபதி அவர்கள் மீண்டும் வென்று ஆட்சியில் அமர்ந்திடச் செய்வோம் வென்றெடுப்போம்.
மதவாதிகளை ஒழித்து விரட்டி அடிப்போம்.
அடிமை வாதிகளை உணரவைப்போம்.
குழப்பவாதிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்.
கொள்கை என்னவென்று தெரியாத புது அரசியல் வாதிகளை ஒழிப்போம்.
திராவிட இயக்கத்திற்கு எதிராக நஞ்சுகளை பெரியார் மண்ணில் கால்பதிக்க கனவு காணும் பா.ஜ.க.வை அடியோடு விரட்டி அடிப்போம்.
பெரியார் மண் என்றும் திராவிட மாடல் அரசு தான் என்று உறுதியேற்போம்.திமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு அயராது உழைப்போம்.வென்றெடுப்போம்.
கழகத் தொண்டன்
மு.சு.அன்புமணி
‘விடுதலை’ வாசகன், மதுரை
