சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் வகையில், நாளை (ஏப்ரல் 1) நள்ளிரவு 12 மணி முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு ஏன்?
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) விதிகளின்படி, சுங்கக் கட்டணங்கள் ஆண்டுதோறும் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. சாலை பராமரிப்புப் பணவீக்கம் மற்றும் போக்குவரத்து அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உயர்வு அமைகிறது.
ஏப்ரலில் உயர்வு: 1992-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
செப்டம்பர் உயர்வு: 2008-ஆம் ஆண்டு ஒப்பந்த சாலைகளுக்கு செப்டம்பர் மாதம் உயர்வு அமலாகும்.பாதிக்கப்படும்
முக்கிய இடங்கள்: பரனூர், சிறீபெரும்புதூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூர், மாதூர் மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிக முக்கியமான 60 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
விலை உயர்வு விவரம்: வாகனங்களின் வகையைப் பொறுத்து கட்டணங்கள் பின்வருமாறு அதிகரிக்க வாய்ப்புள்ளது: கார், ஜீப், வேன் (லேசான வாகனங்கள்) ரூ.10 முதல் ரூ.40 வரை லாரி, பேருந்து (கனரக வாகனங்கள்) ரூ.50 முதல் ரூ.200 வரைமாதாந்திர பாஸ் ரூ.300 முதல் ரூ.350 வரை உயர்வு வருடாந்திர பாஸ் ரூ.3,000-லிருந்து ரூ.3,075 ஆக உயர்வு
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.18,865 கோடி வசூல்! தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண வசூல் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி:2021 – 2026 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் ரூ.18,865.14 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் (2024-25) மட்டும் சுமார் ரூ.4,300 கோடி வசூலாகியுள்ளது.அதிகபட்சமாக கிருஷ்ணகிரி – தோப்பூர் நெடுஞ்சாலையில் ரூ.275.13 கோடியும், குறைந்தபட்சமாக குருங்குடி சுங்கச்சாவடியில் ரூ.2.55 கோடியும் வசூலாகியுள்ளது.இந்த திடீர் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
