சென்னை, மார்ச் 31- 10ஆம் வகுப்புத் தேர்வின் மொத்த மதிப்பெண் 625 இலிருந்து 525 ஆக குறைக்கப்படுகிறது. இதுவரை மூன்றாம் மொழிப் பாடத்திற்கு வழங்கப்பட்ட 100 மதிப்பெண்கள் இனி மொத்த மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்படாது.
மேலும், மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு இனி ‘மதிப்பெண்’ முறைக்கு பதிலாக ‘கிரேடு’ (A, B, C, D) முறை மட்டும் பின்பற்றப்படும். இந்த மாற்றம் ஹிந்தி, சமஸ்கிருதம், துளு, மராத்தி, அரபி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மூன்றாம் மொழிகளுக்கும் பொருந்தும். இந்த புதிய நடைமுறை 2026 10ஆம் வகுப்புத் தேர்விலிருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
