ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே புகையுது தவெக! ரூ.100 கோடி உறுதிகொடுத்த அந்த வி.அய்.பி. யார்?

2 Min Read

சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் நடக்க போகிறது.. கட்சிகள் அனைத்துமே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, ‘விசில்’ சின்னத்திற்காகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இருந்தாலும், அக்கட்சியின் வேட்பாளர் தேர்வு முறைகள் பெரும் அரசியல் விவாதங்களையும், தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

சேலம் மேற்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் லட்சுமணன்.. இவர் ஒரு முன்னாள் காவல் ஆய்வாளர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவரும்கூட..

ரூ.100 கோடி ரூபாய் செலவு

பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டியதாக தெரிகிறது.. தற்போது அதிமுகவில் இணைய முயன்று தோல்வியுற்றார். அதிமுக தலைமையிடம் “சீட் கொடுத்தால் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயார்” என்று அவர் அளித்த வாக்குறுதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுபடவில்லையாம்..

ஆனால் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் இணைந்த லட்சுமணனுக்கு உடனடியாக சேலம் மேற்குத் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. “பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயார்” என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே இவருக்கு கதவுகள் திறக்கப்பட்டதாக அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வேதனையுடன் கூறுகிறார்களாம்.

த.வெ.க. நிர்வாகிகளுக்கு பிரியாணி

இப்போது த.வெ.க. நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து மற்றும் பணத்தை வாரி இறைத்து லட்சுமணன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

இப்படி சேலம் மட்டுமல்லாது, தென் மாவட்டங்களிலும் த.வெ.க.வின் வேட்பாளர் தேர்வு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது… அதாவது தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் நீண்ட கால நண்பரான சிறீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்து உழைத்த விசுவாசமான தொண்டர்களையும், உள்ளூர் நிர்வாகிகளையும் புறக்கணித்துவிட்டு, சினிமாவின் நட்பின் அடிப்படையில் சீட் வழங்கப்பட்டதாகக் கூறி த.வெ.க.வினர் சாலை மறியலில் ஈடுபடும் அளவுக்கு சென்றுள்ளனர்..

திருவள்ளூர் தொகுதி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கு சேலத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்ததும் தொண்டர்களைக் கொந்தளிக்க செய்துள்ளது. “மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படை அரசியல் நாகரிகம் கூட இல்லாமல் வெளியூர்க்காரர்களைத் திணிப்பது த.வெ.க.வின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அனைத்துக்கும் மேலாக, வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டு பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்க்கு, முதல் நாளே காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பெரவள்ளூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றுவிட்டு, அனுமதி பெறாத கொளத்தூர் பகுதிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது. பிறகு செம்பியம் காவல் துறையினருடன் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

பணபலம் கொண்ட மாஜிக்கள் ஒருபுறம், நட்புக்காக வழங்கப்படும் வாய்ப்புகள் மறுபுறம் என த.வெ.க.வின் வேட்பாளர் பட்டியல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *